தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 24.12.24 செவ்வாய்க்கிழமையன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்,
தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் (பொறுப்பு), பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Add a Comment