தமிழ்நாடு மீனவர் சங்கம் மற்றும் தமிழ்நாடு ப்ளெக்ஸ் டிசைனர் அசோசியேஷன் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் நலத்திட்ட பணிகள் நிகழ்ச்சியில் 2.10.24 புதன்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் பட்டினப்பாக்க கடற்கரையில் கலந்துகொண்டு மீனவக் குடும்பங்களை சார்ந்த மகளிருக்கு தையல் கருவிகளை வழங்கி காந்தியடிகளின் சிறப்புகளை குறித்து உரையாற்றினேன் . திரு அன்பழகன் நடத்திய நிகழ்வில் லியோ சங்கத்தில் பழகிய நண்பர்களான திரு விஜி குமார் மற்றும் திரு ராம் இருவரையும் ஆண்டுகள் பல கடந்து சந்தித்தது பெரு மகிழ்ச்சியாகும்.
POST: 2024-10-03T13:35:19+05:30
மொழியாக்க வானின் விண்மீன் மறைந்ததே! திரு. பொன் சின்னதம்பி முருகேசன் (2.7.1949 - 02.10.2024) அரிய ஆங்கில நூல்களை அருந்தமிழுக்கு ஆக்கி உரிய தமிழ்த் தொண்டால் உயர்ந்த பெருந்தகை முருகேசனை இழந்து விட்டோமே! உறங்கா விழிகள் ஒழியா உழைப்பு மிகுதுயர் எந்தன் உள்ளம் மேவிடச் செய்தாய் நண்ப ஆழ்கடல் அமிழ்ந்ததே! தமிழ்நாடு அரசுப் பணியில் பணியாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு தான் கற்ற ஆங்கிலத்தையும் தான் பெற்ற அருந்தமிழையும் இணைத்து அறிவியல், மெய்யியல் பொருளியல் துறைகளிலுள்ள ஆங்கில நூல்களை தமிழ ...
POST: 2024-10-02T10:05:26+05:30
பல்லான்ற கேள்வி பயனுணர்வார் என்று தொடங்கும் நாலடியார் பாடல் இருநூற்(று) ஐம்பத்(து) இரண்டு; சொல்லான்ற கன்னல்-சுவை நிகர் கட்டுரைகளைக் கொண்டு வரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) இரண்டு.
POST: 2024-10-02T09:34:15+05:30
இராமலிங்கர் பணிமன்றம் ஏ.வி.எம். அறக்கட்டளை இணைந்து நடத்தும் 57ஆம் ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழா அழைப்பிதழ் நாள்: 1.10.2024 செவ்வாய்க் கிழமை முதல் 3.10.2024 வியாழக் கிழமை வரை இடம் : முத்தமிழ்ப் பேரவை திருவாவடுதுறை டி.ஆர்.இராஜரத்தினம் கலை அரங்கம் (சத்யா ஸ்டுடியோ எதிரில்) இராஜா அண்ணாமலைபுரம், சென்னை 600 028. 2024 அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதிகள் அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய நூல்கள் வெளியீடு மாநில அளவிலான போட்டிகளில் வென்ற மாணவ மாணவியர்க்கு பரி ...
POST: 2024-10-02T09:34:15+05:30
இராமலிங்கர் பணிமன்றம் ஏ.வி.எம். அறக்கட்டளை இணைந்து நடத்தும் 57ஆம் ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழா அழைப்பிதழ் நாள்: 1.10.2024 செவ்வாய்க் கிழமை முதல் 3.10.2024 வியாழக் கிழமை வரை இடம் : முத்தமிழ்ப் பேரவை திருவாவடுதுறை டி.ஆர்.இராஜரத்தினம் கலை அரங்கம் (சத்யா ஸ்டுடியோ எதிரில்) இராஜா அண்ணாமலைபுரம், சென்னை 600 028. 2024 அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதிகள் அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய நூல்கள் வெளியீடு மாநில அளவிலான போட்டிகளில் வென்ற மாணவ மாணவியர்க்கு பரி ...
POST: 2024-10-01T09:56:27+05:30
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை சென்னை மாவட்டம் 2024-2025 திருவள்ளுவராண்டு 2055/ குரோதி / புரட்டாசி 15 01.10.2024 @ இடம்:இராணி மேரிக் கல்லூரி, சென்னை இளையோர் இலக்கியத் திருவிழா மாணவர் அறிவிப்பு பெருவிழா தமிழுக்காகத் தன்னை ஈந்த ஈகியர் அறிமுக விழா வண்ணத் தமிழை வாள்போல் சுழற்றும் நாவலர்கள் கன்னல் சாறாய் பிழிந்த கன்னித் தமிழை எண்ணங்களில் வார்க்கும் இலக்கியத் திருவிழா முதல்வர்களின் முதல்வராம் தமிழ்நாடு முதல்வரின் கனவுக்குக் காட்சி ...
POST: 2024-09-30T08:58:46+05:30
செப்டம்பர் 30 - மொழியாக்கத்திருநாள் பௌத்த அறிவுக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் The great learning temple என்ற மடாலயத்தில் 500க்கும் மேற்பட்ட துறவிகளின் முக்கியப்பணி பெளத்த சமய ஏடுகளை சீன மொழியில் மொழியாக்கம் செய்து பெரும்பான்மையான ஏடுகள் பாலி மொழியிலும் சில ஏடுகள் சமசுகிருதத்திலும் இருந்தன. பௌத்த சமய சூத்திரங்களையும் அறநெறிகளையும் மொழியாக்கம் செய்ய ஒரு துறவிக்கு ஏழு ஆண்டுகள் தேவைப்படும். மொழிபெயர்த்த பிரதிகளை மூத்த துறவிகள் நுண்ணாய்வு செய்து, அறிஞர் குழுவால் மூலப்படியையும் நுண்ணா ...
26 – ஆம் ஆண்டு கம்பன் கழக விழா
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலாஅலகு இலா விளையாட்டு உடையார் - அவர்தலைவர் ; அன்னவர்க்கே சரண் நாங்களே அன்புடையீர் !வணக்கம். நம் கழகத்தின் 26 ஆம் ஆண்டு விழா 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இராமநாதபுரம், வெளிப்பட்டணம், ஆயிரவைசிய மகாஜன சபை திருமண மாளிகையில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். இவண்… கம்பன் கழகம்,இராமநாதபுரம். ...
POST: 2024-09-29T10:11:31+05:30
26 - ஆம் ஆண்டு கம்பன் கழக விழா இராமநாதபுரம். உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் - அவர் தலைவர் ; அன்னவர்க்கே சரண் நாங்களே அன்புடையீர் ! வணக்கம். நம் கழகத்தின் 26 ஆம் ஆண்டு விழா 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இராமநாதபுரம், வெளிப்பட்டணம், ஆயிரவைசிய மகாஜன சபை திருமண மாளிகையில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். இவண்... கம்பன் கழகம், இராமநாதப ...
மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் முத்தமிழ்முரசு இரா.திருமாவளவனார் பேருரை !
மணக்கும் மலேயாவில் மாத்தமிழை நிகரற்ற பெருமிதத்துடன் வழி நடத்தும் தனித்தமிழ் தென்றல் திருமாவளவன் மாநிலக் கல்லூரியில் உரையாற்றிய நிகழ்ச்சியில் 25.9.24 புதன் கிழமையன்று கலந்து கொண்டு வாழ்த்தினேன் தமிழ்நாட்டின் முதல் கல்லூரியான சென்னை மாநிலக்கல்லூரியில் திராவிட மொழிநூல் ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் விழா ! சென்னை மாநிலக் கல்லூரியில் 25.9.2024 அறிவன் (புதன்) கிழமை காலை 10.30 மணிக்குத் ‘தமிழும் பாவாணரும்’ என்னும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. த ...


