" Arul.2009/FB/#69029 செய்தி வெளியீடு எண்: 393 : 14.07.2026 தமிழ் வளர்ச்சித் துறை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தல் 15.07.2026 தனிப்பெரும் தமிழ் மாமலை - மறைமலையடிகளார் தமிழகப் புலவர் பெருமக்களுள் மறைத்திரு மறைமலையடிகளார். தனித்தமிழ்த் தந்தையாக மட்டுமின்றித் தனித்திறம் படைத்த பல்கலைப் பேரறிஞராக விளங்கினார். தமிழ். ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளில் வல்லுநராகத் திகழ்ந்த அடிகளார் சமயம். சமுதாயச் சீர்திருத்தம் ஆகிய மக்களுக் ...
POST: 2026-07-16T10:45:09+05:30
" Arul.2009/FB/#69028 மருத்துவ மாமணி தாரா நடராசன் பிறந்த நாள் ஒளி 15.7.1932- நிழல் 14.8.2020 எங்கள் அமுத ஊற்றான அம்மாவின் தொண்ணூற்று நான்காம் பிறந்த நாள் எங்கள் தாயே! எங்கள் நல்வாழ்வே! ஒளியின் ஒளியே! அம்மா! அம்மா தூயமொழி பல உரைத்தே நல்வாழ்வுக்கு விதைவிதைத்து வளர்த்த அம்மா! அம்மா! பண்ணேறு மொழியடியார் பலர் வணங்க_ நிறைவாய் எங்கள் மூவர் வாழ்விலும் ஒளி வீசும் அம்மா! அம்மா! ...
POST: 2026-07-15T09:45:12+05:30
"" Arul.2009/FB/#69027 மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்" எனப் பொலிவோடு தொடங்கி, மெய்யுணர்வின் உச்சத்தையும் பற்றற்ற வாழ்வின் தத்துவத்தையும் செதுக்கித் தந்த திருவள்ளுவரின் எழில்மிகு திருக்குறள் எண் முந்நூற்று நாற்பத்(து ) ஐந்து! கற்றும் கேட்டும் நற்றமிழை நெஞ்சில் தாங்கி வாழும் உலகத் தமிழர் சிந்தனையைத் தூண்டி, திசைதோறும் நந்தமிழின் புகழைப் பரப்பித் திகழும் உலகத் தமிழிதழ் எண் முந்நூற்று நாற்பத்(து ) ஐந்து!
POST: 2026-07-14T10:04:24+05:30
" Arul.2009/FB/#69026 ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே! எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ்நாடு சிறு தொழில் நிறுவன அலுவலகத்தின் 11 பிரிவுகளில் உள்ள 210 கோப்புகள் மற்றும் 32 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 10.07.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆட்சிமொழித் திட்டச்செயலாக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதனை அலுவலகத்தில் எளிமையாகவும் சிறப்பாகவும் எ ...
POST: 2026-07-13T10:09:40+05:30
" Arul.2009/FB/#69025 ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே! எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் அலுவலகத்தின் 13 பிரிவுகளில் உள்ள 423 கோப்புகள் மற்றும் 85 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் தட்டச்சர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 10.07.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன். துறையின் முதன்மை இயக்குநர் திரு. இரா. ...
POST: 2026-07-12T09:49:57+05:30
" Arul.2009/FB/#69024 https://avvainatarajan.com/2026/17207/ பண்புப் பெட்டகத்தை இழந்துவிட்டோமே! என் தந்தையாரின் இனிய நண்பரும், எங்கள் இல்லத்திற்குத் தொடர்ந்து வருகை புரிந்தவருமான தமிழகக் காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் திரு. வைகுந்த் அவர்கள் (4.3.1937–10.7.2026) தன்னுடைய 90ஆம் அகவையில் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அப்பா மறைந்த பிறகும் தொடர்ந்து எங்கள் இல்லத்திற்கு உரிமையோடு வந்து, உதவியாளர் பிரதாப் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் கணின ...
POST: 2026-07-11T10:02:25+05:30
" Arul.2009/FB/#69023 கலைமகள் - ஜுலை மாத இதழ் (1.7.2026) பக்கம் எண் : 39,40,41 ஊற்றின் எழுச்சி முனைவர் ந அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை ஊற்றின் எழுச்சி நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பதற்கேற்ப கவிஞர் தாகூர் குடும்பத்தையே தனிநிலை பல்கலைக்கழகம் என்று பெருமிதத்தோடு கூறலாம். அத்தகைய ஒரு கலைக்கழகமாக தாகூர் குடும்பமும் திகழ்ந்தது. தாகூரின் தந்தை தேவேந்திரநாத் வீட்டில் எப்போதும் அறிஞர்களோடு அளவளாவிக் கொண்டு இருப்பார்கள். இரவீந்திரரின் பெரிய அண்ணன் பல்கலையில் வல்லவ ...
POST: 2026-07-10T10:25:14+05:30
" Arul.2009/FB/#69022 https://www.facebook.com/share/r/1YPHf7RG4P/ மாண்புமிகு அமைச்சர் அவர்களின் முகநூலில் இருந்து பெறப்பட்ட தகவல் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாய்மையே வெல்லும் தமிழ் வளர்ச்சித் துறை அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழா - அழைப்பிதழ் நாள் : 09.07.2026, வியாழக்கிழமை நேரம் : காலை 10.30 மணி இடம் : தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, அண்ணா சாலை, சென்னை - 600 002 ... 10.30 மு.ப. : தமிழ்த்தாய் வாழ்த்து நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை : ஔவை அருள் இய ...
POST: 2026-07-09T08:56:54+05:30
" Arul.2009/FB/#69021 தமிழ்ச்சான்றோர்கள் அ.கா.பெருமாள் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை (1902-1981) திண்டிவனம் நகரசபை சுகாதார ஆய்வாளர் ஒருவர் சங்க இலக்கியங்களுக்கு, குறிப்பாகப் புறநானூற்றுக்கு விரிவான உரை எழுதியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நடந்திருக்கிறது. பருத்த உடம்பு; சராசரி உயரத்திற்கும் கீழ்; பத்த வெட்டிய தலைமுடி;நெற்றி முழுவதும் ஆட்கொண்ட திருநீறு; தழையத் தழையக் கட்டிய வேட்டி; தூய்மையான ஜிப்பா; இவர் தரையில் அமர்ந்துதான் எழுதுவார்; மூக்கு பேனாதான் பயன்படுத்துவார்; செந்தமிழில் ...
POST: 2026-07-08T10:01:24+05:30
"" Arul.2009/FB/#69020 நோற்றோர் மன்ற தோழி, தண்ணெனத் தூற்றுந் துவலை"... எனத் தொடங்கும், குறுங்குடி மருதனாரின் குறுந்தொகைப் பாடல் எண் முந்நூற்று நாற்பத்து நான்கு! போற்றும் உலகோர் வியக்கும் செந்தமிழின் சீர்மையைத் திசையெட்டும் எட்டும் உலகத் தமிழிதழ் முந்நூற்று நாற்பத்து நான்கு!
