POST: 2015-03-20T20:21:42+05:30

நாளும் வளர்ந்த நாரத கான சபை நாரத கான சபையின் நாயகர் ,வழக்கறிஞர் கிருஷ்ணசாமி மறைவு கலையுலகத்திற்கு ஒரு மாபெரும் அணிகலனை இழப்பது போலாகும். அடக்கமும்,உயர்வும்,அரவணைப்பும் , எவர் முகமும் கோணாத இயல்பும் தென்னாங்கூர்த் திருக்கோயிலைக்காத்து வந்த பெருமிதமு ...

POST: 2015-03-19T23:30:20+05:30

இன்றைய தினமணியில் (19.3.2015)கலைச்சொற்களாகிய முகநூல்(facebook),சுட்டுரை(twitter),கட்செவி அஞ்சல் அல்லது விரி நொடி அஞ்சல்(Whatsapp) ஆகிய சொற்கள் இடம்பெறுவது பாராட்டத்தக்கது . ஆயிரம் மேடைகளில் பேசும் தமிழ் வளர்ச்சியை இந்த செய்தி வெளியீடு பெரிய வெற்றிய ...

POST: 2015-03-19T23:14:24+05:30

காதலர்க்குத் தோன்றும் நிறைவான நல்லுணர்வு, கொடுமையான புல்லெழுச்சி, உணராக்கேடு, ஐயச்சிந்தனை, திரிபுப் போக்கு, வழுவமைவு, வேட்கையளவு, உடற்கூறு முதலிய பாலியத்தின் நுணுக்கங்களை விடை விளக்கங்களாக இந்நூலில் பரக்கக் காணலாம். அவ்வாறே மன, குணநல மருத்துவத் திலகம் மாத ...

POST: 2015-03-19T23:12:58+05:30

மன மயக்கங்களுக்கு மருந்து தரும் வகையிலும், சிலர் தயக்கங்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் நிலையிலும், இளைஞர் கலக்கங்களுக்கு நல்வழி காட்டும் வகையிலும் டாக்டர் மாத்ருபூதம் ‘புதிரா? புனிதமா?‘ என்னும் நூலைத் தக்க சான்றுகளோடும், ஆராய்ச்சி நோக்கோடும் வழங்கியிருக்க ...

POST: 2015-03-19T23:09:15+05:30

பாலுணர்ச்சி என்பது இல்லறத்துக்கு முன்னும் பின்னும் இயல்பாக விளையும் உடல் உணர்வு என்றாலும், கண்ணும் கருத்தும் வைத்து, விழிப்போடு செயற்பட்டால் உடலுக்கு வரும் இடர்ப்பாடுகளை நாம் எளிதில் களையலாம். இவ்வாறு வருமுன் காக்கும் வாழ்க்கை ஏடாக இந்தப் பாலொழுக்கக் காவி ...

POST: 2015-03-19T23:07:30+05:30

அரிது அரிது மானிடர் ஆதல் அரிது‘ என்பர். மானிட வாழ்வை நாம் மதித்து நடக்கின்றோமா? நடைமுறையில் நமக்குள் எத்தனை வேற்றுமை? உயர்வென்றும், தாழ்வென்றும் ஏழை என்றும், சொல்வந்தன் என்றும்,செயற்கரிய செய்வாரென்றும், செய்யாதார் என்றும் எத்தனை மேல் கீழ் உள்ளன ! எவை எப்ப ...

POST: 2015-03-19T23:04:07+05:30

கருத்தடை முறைகள் ஒரு பயனுள்ள பகுதி. கருத்தடை உளவியல் குறித்து இல்லறத்தார் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றிமையாத கல்வியாகும். ஒரு குழந்தை எப்படி உருவாகிறது? என்னும் கூறுபாட்டையும், சோதனைக் குழாய்‘ குழந்தைகள் குறித்தும் கூறப்படும் மருத்துவக் குறிப்புகள் விழும ...

POST: 2015-03-19T23:01:53+05:30

இல்லற வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்கள் குறித்து, இலக்கியச் செய்திகளோடு மருத்துவ விளக்கங்களையும் புதுமைகளையும் இணைத்துக் கூறும் டாக்டர் மாத்ருபூதம் பொருத்தமான திருக்குறளையும், திரைப்படப் பாடல்களையும் நகைச்சுவைத் துணுக்குகளையும் ஆங்காங்கே கட்டுரைகளில் தெள ...

POST: 2015-03-11T19:46:38+05:30

இந்த நிலையில் வாழ்க்கைக்கு விளக்கம் தரும்வகையில் புதிரா? புனிதமா? என்னும் இந்த நூல் பொலிவோடு வெளிவந்துள்ளது. தொலைக்காட்சியில் பல்லாயிரக்கணக்கானவர் காத்திருந்து கண்டு மகிழும் மனநல மருத்துவர் டாக்டர் மாத்ருபூதம் அவர்களால் அளிக்கப்பெற்ற நல்ல தொடர் இது என்ற ...

POST: 2015-03-10T19:59:48+05:30

காமத்தை அறத்தில் கனிந்ததாகக் கருதினால் அது காதலாகும். தவறினால் அது வஞ்சக வலையாகும். வானுயர்ந்தவர்களும் அந்த வலையில் தலை கவிழ்ந்து சிந்தை தடுமாறுவார்கள் பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்