POST: 2015-03-09T20:52:51+05:30

காதல், காமம் என்ற இரண்டு சொற்களும் நெடுங்காலமாக வழங்கப்படுகின்றன. உயர்ந்த உறவுகளைக் காதல் என்ற சொல்லோடு இணைத்துச் சொல்வது வழக்கம். உள்ளத்தோடு ஒட்டிய தொடர்பையே காதல் என்று குறிப்பிடலாம். பாலுணர்வை நினைக்கும்போது, உடம்பு தழுவிய இணைப்பையே பெரிதும் கருதுகிறோ ...

POST: 2015-03-09T20:50:48+05:30

திருக்குறளில் இன்பத்துப்பாலும் ஒன்று காமத்துப்பால் என்று இதனைக் கூறுகின்றோம். காமம், காம இச்சை, காமக் களியாட்டம் என்னும் போது. அது வெறுக்கத்தக்கது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ‘மலரினும் மெல்லிது காமம்‘ என்று தானே இலக்கணம் புனைகின்றார். கலை நலம் வாய்ந்த க ...

POST: 2015-03-09T20:47:08+05:30

அதிர்ந்திடும் இளமைப் போதில் ஆவன அறங்கள் செய்து முதிர்ந்திடும் பருவந்தன்னில் மக்கட்கு முடியைச் சூட்டி எதிர்ந்திடும் துன்பமேதும் இல்லாமல் மக்கள், பேரர் வதிந்திடல் கண்டு நெஞ்சு மகிழ்வதே வாழ்வின் வீடு

POST: 2015-03-09T20:37:48+05:30

அம்மூவனார்- பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் அம்மூவனார் என்னும் தொடரில் ‘அம்‘ என்பதை மற்றவர்களினின்று வேறு பிரித்தறிவதற்காகச் சேர்க்கப்பட்ட அடைமொழியாகக் கொண்டால், அஃது எக்காரணத்தால் அடைமொழியாக அமைந்தது என்பதை ஆராய்தல் வேண்டும். கவிதையில் வரும் சிறப்பான சொல ...

POST: 2015-03-09T20:29:09+05:30

அம்மூவனார்-6 டாக்டர் ஔவை நடராசன் அகப்பொருட் கோவைக்கே யன்றி அந்தாதி யிலக்கியத்திற்கும் வழிகாட்டியவர் அம்மூவனார். கோவைபட அமைந்த இத்தொண்டிப் பாடல்களே அந்தாதிபடவும் அமைந்துள. இரு புதுமைக்கும் இடனாக ஒரே பத்துப்பாடல்களை யாத்தார் ஆசிரியர். சங்க விலக்கியத்தின் ...

POST: 2015-03-04T19:31:26+05:30

அம்மூவனார்-5 டாக்டர் ஔவை நடராசன் கனவுப் பாடல் 82 கற்புப் பாடல் 45 தலைவி கூற்று 56 தோழி கூற்று 43 தலைவன் கூற்று 17 பரத்தை கூற்று 10 நற்றாய் கூற்று 1 பிற்கால இலக்கியங்கட்குப் பல புதுவழி திறந்தவர் அம்மூவனார். அகத்திணை நிகழ்ச்சிகள் கோவையாக நிரல் படத் தொடுக ...

POST: 2015-03-04T19:24:10+05:30

அம்மூவனார்-4 டாக்டர் ஔவை நடராசன் என்னும் ஐங்குறுநூற்றுச் சிறப்புப் பாயிர வெண்பாவும் இவர் இன்னராதலை வலியுறுத்தும். மேலெடுத்துக் காட்டிய இவருடைய பாடலால் மலை நாட்டின் கடற்கரையில் மாந்தை, தொண்டி என்பனவும், பாண்டிநாட்டின் கடற்கரையில் கொற்கை என்பதும் மலையமானா ...

POST: 2015-02-28T18:19:44+05:30

28/2/2015 செய்திக் குறிப்பு அறிஞர் ஔவை நடராசன் பதவி விலகினார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவர் பதவி மூதறிஞர் ஔவை நடராசன் அவர்களை காங்கிரஸ் அரசு செம்மொழித் தமிழாய்வு மத்திய நி ...

POST: 2015-02-27T19:14:06+05:30

அம்மூவனார்-3 பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் முன்னரே குறித்தபடி சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய தொண்டி நகரமும், அந்நாட்டின் கண்ணதாகிய மாந்தை நகரமும், பாண்டி நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய கொள்கைநகரமும், நடுநாட்டின் கண்ணதாகிய கோவலூரும் ஐங்குறு நூற்றிலும் ...