உலகத்தமிழ் இதழ்-254
வண்டல் தைஇயும்வரு திரை உதைத்தும் எனத் தொடங்கும்உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் இரு நூற்(று) ஐம்பத்து நான்கு; கண்டார் மயங்கும் கவினார்ந்த வண்ணப் படங்களுடன் தண்டார் தமிழில் வரும்உலகத் தமிழிதழ்இருநூற்(று) ஐம்பத்து நான்கு 254 உலகத்தமிழ் 16102024Download
POST: 2024-10-19T07:35:26+05:30
பொறுத்தார் அகிலம் வெல்வார் அமைதி, பொறுமை, வாய்மை என்ற அடிப்படை இயல்புகளோடு வளர்ந்தவர் என் அருமை இளவல் சீனிவாசன். அவரின் தாயாரின் தொடர் கண்காணிப்பில் வளர்ந்தாலும் பள்ளிக்கல்வியில் ஆர்வம் காட்டாமல் சுணக்கமாக இருந்த பருவத்தில் எங்கள் பெற்றோரின் அண்ணா நகர் இல்லத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் தாயார் கேட்க எந்தையார் என்னிடம் உன் தம்பி போல் பேணுக என்றார்... 1989 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை யான் பணியாற்றிய கிளியா விளம்பர நிறுவனத்தில் சீனிவாசன் என் குதியுந்து ஓட்டுனராகவும், அ ...
POST: 2024-10-18T09:59:36+05:30
இளையோர் இலக்கியப்பயிற்சி பாசறை திருவள்ளூர் மாவட்டம் 18.10.24 வெள்ளிக்கிழமை இடம் தளபதி கே விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருத்தணி நிகழ்ச்சி நிரல் 10.00-10.45 : தொடக்க நிகழ்வு : தமிழ்த்தாய் வாழ்த்து : வரவேற்புரை முனைவர் இரா. வேதநாயகி முதல்வர் தளபதி கே. விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நோக்கவுரை கவிஞர் நெல்லை ஜெயந்தா ஒருங்கிணைப்பு அலுவலர் 10.50-11.20 : " தமிழின் அருமை தமிழர் பெருமை" கவிஞர் நந்தலாலா 11.30-12.00 : " கைநிறையக் கவிதைகள்" கவிஞர் மணி பாரதி ...
POST: 2024-10-17T09:50:13+05:30
எனக்கு பிறந்த நாள் 16.10.24 அன்று வாழ்த்துக்கூறிய பெருங்குடும்பத்து நண்பர்களுக்கு, பெருகும் அன்பால் உருகி உரைக்கிறேன்-நன்றி தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத்துறையின் அலுவலர்கள் இன்று மதியம் என்னை கேக் வெட்ட வைத்து மகிழ்ச்சியில் வாழ்த்தினார்கள்
POST: 2024-10-17T09:50:13+05:30
எனக்கு பிறந்த நாள் 16.10.24 அன்று வாழ்த்துக்கூறிய பெருங்குடும்பத்து நண்பர்களுக்கு, பெருகும் அன்பால் உருகி உரைக்கிறேன்-நன்றி தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத்துறையின் அலுவலர்கள் இன்று மதியம் என்னை கேக் வெட்ட வைத்து மகிழ்ச்சியில் வாழ்த்தினார்கள்
POST: 2024-10-16T08:54:49+05:30
வண்டல் தைஇயும் வரு திரை உதைத்தும் எனத் தொடங்கும் உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் இரு நூற்(று) ஐம்பத்து நான்கு; கண்டார் மயங்கும் கவினார்ந்த வண்ணப் படங்களுடன் தண்டார் தமிழில் வரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்து நான்கு
POST: 2024-10-15T10:20:24+05:30
பல்லாண்டு வாழ்க வட சென்னையில் உள்ள டாக்டர் குருசாமி முதலியார் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் மேனிலைப் பள்ளியின் மேனாள் முதல்வர் மற்றும் நீடு புகழ் கொண்ட தமிழாசிரியர் புலவர் இராமலிங்கம் அவர்களின் 93 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு புலவரை நேரில் அவருடைய அண்ணா நகர் இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் அளவளாவி பொன்னாடை சூட்டி வாழ்த்துப்பெற்று மகிழ்ந்தேன். திங்கட்கிழமை 7.10.24 அன்றையப் பொன்மாலைப் பொழுதில் பிறந்தநாள் நாயகரின் இனிய குடும்பத்தினருடனும் அண்ணாநகர் தமிழ்ச்சங்கப் பெருமக்களுடன் இணைந்த ஒளிப்படக்கா ...
POST: 2024-10-14T09:00:00+05:30
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை செங்கல்பட்டு மாவட்டம் 2024-2025 திருவள்ளுவராண்டு 2055/ குரோதி / புரட்டாசி - 24 14.10.2024 திங்கட்கிழமை இடம்: இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலைக்கல்லூரி இளையோர் இலக்கியத் திருவிழா மாணவர் அறிவிப்பு பெருவிழா தமிழுக்காகத் தன்னை ஈந்த ஈகியர் அறிமுக விழா வண்ணத் தமிழை வாள்போல் சுழற்றும் நாவலர்கள் கன்னல் சாறாய் பிழிந்த கன்னித் தமிழை எண்ணங்களில் வார்க்கும் இலக்கியத் திருவிழா முதல்வர்களின் முதல்வராம் ...
POST: 2024-10-13T12:12:38+05:30
இரும்பென்றால் டாட்டா நேரில் சந்தித்ததில்லை! வணிக உறவுமில்லை! பணியாற்றியதும் இல்லை! சொந்தக்காரரும் இல்லை ! இவ்வளவு இன்மையிலும் உண்மையாகவே உங்கள் மறைவுச் செய்தி உள்ளத்தில் வலிக்கிறது. எங்கள் இல்லத்தில் கரையும் உப்பாகவோ குடிக்கும் காப்பியாகவோ தேநீராகவோ குளிக்கும் சோப்பாகவோ இருந்ததன் காரணமாக உங்கள் இழப்பு மட்டும் வலிக்கிறது. பார் போற்றும் பாரத நாட்டின் வணிக வேந்தர் திரு ரத்தன் டாடா மறைந்த செய்தி கேட்டு சில நிமிடம் என்னை மறந்தேன்... என் தாத்தா முதல் மகள் வரை வணிகத்தில் உய ...


