POST: 2026-05-28T10:39:24+05:30

" Arul.2009/FB/#68979 அன்னையின் திருப்பணி அணி 1 காலத்தின் சுவடுகளில் சில நிகழ்வுகள் மட்டும் என்றும் பசுமை மாறாத காவியங்களாக நிலைத்து விடுகின்றன. தமிழ்ப்பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகத்தில் வசிப்போர் ஒரு திருக்கோயில் வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தபோது, என் அன்னையார் மருத்துவமாமணி தாரா நடராசன் (அன்றைய தஞ்சை அரிமா மகளிர் சங்கத் தலைவர்) அவர்கள் அதற்காகப் பெருமுயற்சி எடுத்தார். இந்தியன் வங்கியின் அந்நாளைய தலைவர் டாக்டர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களின் நிதியுதவி எனும் பெருங்கொடையால் அருள்மி ...

POST: 2026-05-27T10:17:29+05:30

"" Arul.2009/FB/#68978 திரிமருப் பிரலை யண்ணல் நல்லேறு அரிமடப் பிணையோ" எனத் தொடங்கிப் பெருங்குன்றூர்க் கிழார் நயம்பட உரைத்த குறுந்தொகைப் பாடல் எண் முந்நூற்(று) முப்பத்(து) எட்டு! திரிகடுகந் தந்த தேன்தமிழைத் திசையெங்கும் பரப்பியே உவகை கொள்ளும் உலகத் தமிழிதழ் எண் முந்நூற்(று) முப்பத்(து) எட்டு!"

POST: 2026-05-26T10:07:20+05:30

" Arul.2009/FB/#68977 தலைமுறை கடந்த நட்பு செந்தமிழ்ப் பேராசிரியராகவும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையின் தலைவராகவும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றி, நம் நினைவில் வாழும் முனைவர் சி. பாலசுப்பிரமணியன் (சி.பா.) அவர்களின் இரண்டாம் மகனும், பொறியாளர் திலகமுமான திரு. வளவன் அவர்களை 15.05.2026 வெள்ளிக்கிழமை அன்று, அவர் பணியாற்றும் ஸ்பிக் அலுவலக வளாகத்தில் சந்தித்து, இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒளிப்படம்.

POST: 2026-05-25T09:42:56+05:30

" Arul.2009/FB/#68976 நினைவலைகள் பல்லாண்டுகளுக்கு முன்பு சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களுடன் அப்பா (ஔவை நடராசன்)எடுத்துக்கொண்ட அரிய ஒளிப்படம்; அப்படத்தில் அப்பாவுக்கு அருகில் இருப்பது பன்மொழிப்புலவர் பேராசிரியர் கா.அப்பாதுரையார், கம்பளிச்சட்டையுடன் எழுத்தாளர் அகிலன், எழுத்தாளர் சாண்டில்யன் உள்ளனர். அதேபோல, மொரிசியசு தீவில் (மோரிசுத்தீவு) அப்பாவின் வண்ணப்படம்.

POST: 2026-05-24T10:48:50+05:30

" Arul.2009/FB/#68975 காலப்பெட்டகம் சென்னைத் துறைமுக இயல் இசை நாடக மன்றம் தேசிய ஒருமைப்பாடு கலை விழா 3.12.1987 வியாழக்கிழமை முப்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு என் ஆருயிர் தந்தை கலந்துகொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கலை விழாவின் அழைப்பிதழையும், நெஞ்சை நெகிழவைக்கும் ஓளிப்படங்களையும், சில நாட்களுக்கு முன்பு அந்த விழாவினை முன்னின்று நடத்திய அருமை நண்பர் என்னிடம் காட்டிப் பெருமகிழ்ச்சி அடைந்தார்!

POST: 2026-05-23T10:39:00+05:30

" Arul.2009/FB/#68974 கேரளத்தமிழ் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கச் செய்தி இலக்கிய மாதஇதழ் மே மாத இதழ் (1.5.26-31.5.26) பக்கம் எண்கள் : 15,16 ,21. கந்தகக் கவிஞரின் நெருப்புக் குரல் முனைவர் ந.அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை சென்ற இதழ் தொடர்ச்சி பதினான்கு சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமும் இவர் கவிதைகளில் உள்ளன. நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து முதலியவற்றையும் எழுதியிருக்கிறார். சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றை அகவலிலும், இசைப்பாவிலும் பாடிய முதற்பாவலராக பாவேந்தர் விளங்குகிறார். இவ்வாற ...

POST: 2026-05-22T10:01:08+05:30

" Arul.2009/FB/#68973 கேரளத்தமிழ் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கச் செய்தி இலக்கிய மாதஇதழ் ஏப்ரல் மாத இதழ் (1.4.26-30.4.26) பக்கம் எண்கள் : 15,16 . கந்தகக் கவிஞரின் நெருப்புக் குரல் முனைவர் ந.அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை என்னைப் போன்றவர்களெல்லாம் இளம் பருவத்தில் பள்ளியில் படிக்கத் தொடங்கிய போதே மொழி, இனம், நாடு, புதுமை வேட்கை என்ற பல இயல்புகளை அறிந்துகொள்வதற்கும் அதனால் உணர்ச்சிப் பொங்குகின்ற எழுச்சி இளைஞர்களாக மாறியதற்குக் காரணம் புரட்சிக் கவிஞரின் நெருப்பு வரிகள் தான். தமி ...

POST: 2026-05-21T10:05:23+05:30

" Arul.2009/FB/#68972 ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே! 20.05.2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 04.30 மணியளவில் தமிழ்நாடு நில சீர்திருத்தத் துறை மற்றும் நகர்ப்புற நிலவரி மற்றும் நகர்ப்புற நிலவரி உச்சவரம்புத் துறையிலும் உள்ள பிரிவுகளில் பேணப்படும் வருகைப்பதிவேடு, பயணநிரல், அனுப்பப்பட்ட கடிதங்கள், காலமுறை அறிக்கைகள், அலுவலக ஆணைகள், செயல்முறை ஆணைகள், முத்திரைகள், பெயர் / தகவல் பலகைகள், கோப்புகள், கணினியில் தமிழ் மென்பொருள் பயன்பாடு, வலைதளம் மற்றும் பிற பதிவேடுகளை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்க ...

POST: 2026-05-20T10:05:40+05:30

" Arul.2009/FB/#68971 "உலகம் படைத்த காலை தலைவ மறந்தனர் கொல்லோ சிறந்திசினோரே எனப் பாலை பாடிய பெருங்கடுங்கோ சொல்லெடுத்துத் தொடுத்த நற்றிணைப் பாடல் எண் முந்நூற்(று) முப்பத்(து) ஏழு! உலகம் போற்றும் உயர்தமிழை உலகெலாம் பரப்பியே உவகை கொள்ளும் உலகத்தமிழிதழ் எண் முந்நூற்(று) முப்பத்(து) ஏழு!"

POST: 2026-05-19T11:02:28+05:30

" Arul.2009/FB/#68970 பழைய நினைவு 2018 இதழில் வெளிவந்த கட்டுரை 73 ஆண்டுகளாக செவ்வாய்தோறும் செந்தமிழ்! -பிஸ்மி பரிணாமன் இந்த 'ஹை டெக்' உலகில், சமூக வலைத் தளங்கள் ஒருபுறம், மறுபுறம் டிவி சானல்கள் ஆட்சி செய்கிற சூழலில், ஒரு இலக்கிய அமைப்பில் மாதம் ஒரு இலக்கிய நிகழ்ச்சி நடப்பதே அரிது. 'செவ்வாய் தோறும் செந்தமிழ்' என்ற இலட்சியத்துடன் ஒவ்வொரு வாரமும் இலக்கிய நிகழ்ச்சியைக் கடந்த 73 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்துவதென்பது ஒரு சாதனைதான். சென்னை உயர் நீதிமன்றத்தின் எதிரில், எஸ்பிளனேடில் செயல்பட்டுவரும ...