POST: 2026-06-17T09:43:26+05:30

" Arul.2009/FB/#68999 பல்வீ பட்ட பசுநனைக் குரவம் பொரிப்பூம் புன்கொடு" எனத் தொடங்கி, பசுமையான சோலையின் இயற்கை மலர்ச்சியைத் தன் தமிழால் அள்ளித்தந்த மிளைகிழார் நல்வேட்டனாரின் எழில்மிகு குறுந்தொகைத் திருப்பாடல் எண் முந்நூற்று நாற்பத்தொன்று! சொல்லின் சுவையால் உலகெங்கும் வாழும் தமிழரின் உள்ளங்களைக் கவர்ந்து தொன்மையின் வேராகப் புதுமையின் மலராக மணம்வீசித் தழைக்கும் உலகத் தமிழிதழ் எண் முந்நூற்று நாற்பத்தொன்று!

POST: 2026-06-16T09:23:09+05:30

" Arul.2009/FB/#68998 அறிஞர்கள் கூடி அண்ணாசாலையில் தமிழ் வளர்த்த வரலாறு (14-2-1987) 39 ஆண்டுகளுக்கு முன்பு அப்பா கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அரிய அழைப்பிதழ் அண்மையில் கிடைக்கப்பெற்றது. ​தொலைபேசி : 556278 ​முச்சங்கம் ​தமிழ் இலக்கியச் சங்கம் - சென்னை - 13. ​தங்களை அன்புடன் அழைக்கிறது ! ​தமிழ் வளர்த்த பெரியோர் - உரைக்கோவை ​இடம் : எல். எல். ஏ. கட்டிடம் தேவநேயப்பாவாணர் மாவட்ட மைய நூலகம் அண்ணாசாலை ​நாள் : 14-2-1987 சனிக்கிழமை மாலை 6-30 மணிக்கு ​முன்னிலை : திரு. கோ. இலட்சுமணசாமி ​ ...

POST: 2026-06-15T09:46:34+05:30

" Arul.2009/FB/#68997 ஷேக்ஸ்பியர் வரிசை 4 ஷேக்ஸ்பியர் நாடகங்கள் OTHELLO ஒதெல்லோ AS YOU LIKE IT விரும்பிய வண்ணமே இலக்கியச் செல்வர் வி ஆர் எம் செட்டியார் முன்னுரை V.R.M. செட்டியார் B.A., ஷேக்ஸ்பியர் ஒரு சிறந்த நாடக மேதை : அவருடைய நாடகத்திலே, கற்பனை எழிலும், பாத்திர சிருஷ்டியும் கவிதை அழகும், புயலும் அருமையாகக் கலந்து புரளுகின்றன: தொட்ட இடமெல்லாம், இலக்கிய எழிலையும், கவிதை மின்னலையும் நாம் காணும்போது, ஷேக்ஸ்பியரின் மேதைமையை நம்மால் மறக்க முடியுமா ? இயற்கையிலே,மனித இயற்கையிலே, ...

POST: 2026-06-14T10:07:32+05:30

" Arul.2009/FB/#68996 நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் மாத இதழ் ஜூன் மாத இதழ் பக்கம் எண்கள் : 21,22,23,24,25. மதிப்புரை தமிழின் காலப்பெட்டகம் ஒளவையின் செந்தமிழ்ப் புதையல் ! இரா.மோகனசுந்தரம் நூல் : ஒளவையின் செந்தமிழ்ப்புதையல் வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் ., பக்கம் : 424; விலை : ரூ. 410 தமிழ்வானில் ஒளிர்ந்த தன்னேரில்லாத, தாரகையாகத் தமிழ்ப் பேராளுமையாக எல்லார் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டவர்தான் முனைவர் ஒளவை நடராசன் அவர்கள். அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ் மேடைகளில் வலம ...

POST: 2026-06-13T11:05:08+05:30

" Arul.2009/FB/#68995 ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே! 10.06.2026 புதன்கிழமையன்று பிற்பகல் 3.00 மணியளவில் தமிழ்நாடு கனிம நிறுவனத்திலும் பிற்பகல் 4.30 மணியளவில் வணிகவரி ஆணையரகத்திலும் உள்ள பிரிவுகளில் பேணப்படும் வருகைப்பதிவேடு, பயணநிரல், அனுப்பப்பட்ட கடிதங்கள், காலமுறை அறிக்கைகள், அலுவலக ஆணைகள், செயல்முறை ஆணைகள், முத்திரைகள், பெயர் / தகவல் பலகைகள், கோப்புகள், கணினியில் தமிழ் மென்பொருள் பயன்பாடு, வலைதளம் மற்றும் பிற பதிவேடுகளை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாள ...

POST: 2026-06-12T10:55:18+05:30

" Arul.2009/FB/#68994 ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே! 09.06.2026 செவ்வாய்க்கிழமையன்று முற்பகல் 11.30 மணியளவில் தமிழ்நாடு மின்சார வாரியத்திலும், பிற்பகல் 4.30 மணியளவில் பொது நூலகத் துறையிலும் உள்ள பிரிவுகளில் பேணப்படும் வருகைப்பதிவேடு, பயணநிரல், அனுப்பப்பட்ட கடிதங்கள், காலமுறை அறிக்கைகள், அலுவலக ஆணைகள், செயல்முறை ஆணைகள், முத்திரைகள், பெயர் / தகவல் பலகைகள், கோப்புகள், கணினியில் தமிழ் மென்பொருள் பயன்பாடு, வலைதளம் மற்றும் பிற பதிவேடுகளை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள், கண்காணிப்பாளர்கள், ...

POST: 2026-06-11T09:56:22+05:30

" Arul.2009/FB/#68993 திரையில் மறையலாம்! திரையே மறையலாமா? ​அனுபவங்களைப் படமாக்குபவர்கள் பலர். ஆனால், திரையார்வலர்களுக்கு அனுபவத்தையே அனுபவிக்க வைத்துப் படம் எடுத்தவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா ஆவார்.(1941-2026) பள்ளி மாணவனாக இருந்த பொழுது கொடைக்கானலில் வாலிபமே வா வா திரைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பொழுது நேரில் சந்தித்து அப்பாவுடன் பேசி மகிழ்ந்தார். ​மாநிலக் கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்தபோது என் பெற்றோர்களுடன் அவரின் முதல் மரியாதை திரைப்படத்தின் முன்காட்சிக்குச் சென்றிருந ...

POST: 2026-06-10T09:29:57+05:30

" Arul.2009/FB/#68992 "புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்" எனத் தொடங்கி நீடுபுகழ் கொண்ட பாடுபுகழ் வள்ளுவர் அழகுற உரைத்த திருக்குறள் எண் முந்நூற்று நாற்பது! செக்கில் சுற்றிவரும் காளை போலச் சிந்தியாமல் புதுமை மணக்கும் மாண்புடன் உயிர்துளிர்க்கும் ஒப்பிலா உலகத் தமிழிதழ் எண் முந்நூற்று நாற்பது!

POST: 2026-06-09T09:56:19+05:30

" Arul.2009/FB/#68991 ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே! தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலுள்ள 24 பிரிவுகளில் 72 இருக்கைகளிலுள்ள 521 கோப்புகள் மற்றும் 80 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக 08.06.2026 திங்கள் கிழமை முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறுவன அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பொது மேலாளர் மாவட்ட வருவாய் அ ...

POST: 2026-06-08T10:44:14+05:30

" Arul.2009/FB/#68990 ஷேக்ஸ்பியர் வரிசை 3 41 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட பதிப்பு. புயல் ( THE TEMPEST ) பொற்கிழிக்கவிஞர் அரு .சோமசுந்தரன் முதற்பதிப்பின் முன்னுரை ஷேக்ஸ்பியரின் நூல்கள் அனைத்தையும் தமிழில் பெயர்த்து வெளியிட வேண்டும் என்ற தணியாத ஆசை உண்டு . ஷேக்ஸ்பியர் பிறந்த இடத்தைத் தரிசித்தவன் நான் . அவரது இலக்கியத்தில் என்னை மறந்து ஈடுபட்டவன் . அவரது படைப்புக்கள் தமிழர்தம் வீட்டில் பரவ வேண்டும் என்ற ஆசையால் தொடர்ந்து மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறேன் . 1.மாக்பெத் 2.இரண்ட ...