POST: 2014-05-12T08:32:24+05:30

தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டி அதனோடு தேனும் பாலும் சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் பிற சுவைப் பொருள்களும் கலந்தாற் போன்று அடியவர் உள்ளத்துள் இனிப்பவனால் போற்றப்பெறும் பெரும்பொருளைத் தனிப் பொருளாகக் கொண்டேத்தும் மரபுடையன புராணங்கள் எ ...

POST: 2014-05-12T08:24:53+05:30

திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்னும் நெடுமொழியை நினைந்த சன்மார்க்க ஆர்வலர்கள், திருவருட்பாவுக்கு உருகாதார் திருவாசகத்துக்கும் உருகார் என்று பாராட்டி மகிழ்கின்றனர்.

POST: 2014-05-12T08:22:02+05:30

“திருவள்ளுவர் பல இடங்களில் வடநூல் மரபை மறுப்பதைப் போலவே குறிப்பாக, மனுதர்மத்தின் வருணத் தர்மத்தை மறுக்கவே பிறப்பொக்கும் என்றார்; அதன் நீட்சியே சிறப்பொவ்வா என்பதும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். மக்கள் அனைவருக் ...

POST: 2014-05-09T08:35:33+05:30

வள்ளுவம் மனுவுக்கு நேர் எதிரானது. தமிழறிஞர்களும், குறளாய்வாளர்களும் இது குறித்து மேலும் சிந்தித்தல் வேண்டும். மெய்ப்பொருள் காண்பது ஆய்வாளரின் கடனன்றோ!

POST: 2014-05-08T07:21:55+05:30

தமிழுக்கு நூற்றுக்கு மேற்பட்ட அடைமொழிகள் உண்டு. அவற்றுள் முத்தமிழ் என்பது நாடறிந்தது. சங்கத்தமிழ் மூன்றும் தா என்று ஔவையார் கேட்ட பாடல் நாம் அறிந்ததாகும்.

POST: 2014-05-07T22:29:08+05:30

திருக்குறள் அமைப்பில் காதல் கோட்பாட்டினைத் தெளிவுற விளக்குவது காமத்துப்பால். இருவர் நெஞ்சங்கள் இழைந்து கலந்து உயர்ந்து நிற்கும் காட்சிகளைக் கடுகினும் சிறிய தொடர்களால் கவினுறக் காட்டுவது காமத்துப்பால்.

POST: 2014-05-06T07:26:14+05:30

திராவிட மொழிக்குடும்பம் என்ற கருத்து அறிஞர் கால்டுவேலர்க்கு முன்னரே துளித்திருந்தாலும் அது தழைத்து செழித்தது அவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தால் தான்.பேரறிஞர் கால்டுவேலர் எழுதிய ஒப்பிலக்கணத்தின் முதற்பதிப்பிற்கு(1856) பின்னால் வந்த பதிப்பில் ச ...

POST: 2014-05-05T08:27:58+05:30

மலேசியா திருநாடு பொதுவுடைமை போக்கை கண்டு மருண்ட போது தொழிலாளர்களின் தலைவர்,தோழர் டேவிட் அஞ்சாத அடலேறாக எதிர்க்கட்சியில் இருந்தவர்-நின்றவர்-வென்றவர். தமிழகத்திற்கு அடிக்கடி வருவார்,தமிழர்களுக்கு உலக வங்கி அமைய வேண்டும் என்று கனவு கண்டார்.உலகத்தமிழர் மாமன் ...

POST: 2014-05-04T06:53:04+05:30

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலம் தொடங்கி இன்றுவரை கடவுளைப் போற்றியும், புகழ்ந்தும் வணங்கியும், வேண்டியும் பாடிய சமயப் பாடல்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. பக்தி உணர்ச்சியால் உந்தப்பட்டு இறையருளை வேண்டிப் பாடிய பாடல்கள் (devotional poems) என்னும் நோக்கில் ப ...

POST: 2014-05-03T22:25:11+05:30

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று (2.5.2014)காலை திருமந்திரமும் வாழ்வியலும்-பட்டயப்படிப்பின் தொடக்கவிழாவில் வாழ்த்துரை வழங்கினேன்.