POST: 2012-01-11T14:17:34+05:30

நூற்றுக்கு 43 குழந்தைகள் போதிய ஊட்ட உணவில்லாமல் எலும்பும் தோலுமாக இருக்கிறார்களாம்.இது பாரத நாட்டிற்கு பெருத்த இழிவு என்று நம் பிரதமர் பேசியிருக்கிறார். இந்தியன் என்று சொல்லடா! இழிவில் நமக்கு யார் நிகர் என்று சொல்லி நில்லடா!! என்று முரசு கொட்டுவோமாக!!!

POST: 2012-01-11T14:14:56+05:30

வங்க மாநில ஆளுநராக இருந்த கோபால காந்தி, சான்றோர்களை புகழத்தெரியாமல் Circus வேலைகளைச் செய்வதில் நம் பாரதம் முன் நிற்கிறது என்று தாகூர் 150 ஆண்டு விழா நினைவிற்கு முன் நிகழ்வாக நூல்களை வெளியிட்டு பேசியிருக்கிறார்....

POST: 2012-01-11T14:13:27+05:30

நேற்றைய செய்தி இன்றைய பொய்... கடல் நடுவில் திருவள்ளுவர்க்கு ஒரு சிலை வைக்க வேண்டுமென்று கண்ணியாகுமரியிலிரிருந்தே ஒரு அரசியல் தலைவர் பேசியிருக்கிறார்.நல்ல வேளை; அவர் திரும்பி பார்க்கவில்லை!

POST: 2012-01-10T16:34:15+05:30

வேண்டலாம் என்பது கெஞ்சுவதற்குரியதாக கருதப்பட்டுக் கோரலாம்,கேட்டுக்கொள்ளலாம் என்று எழுதுவதை எண்ணிப்பார்க்கலாம்.வேண்டுதல் என்பதற்கு விரும்புதல் என்று பொருள்.எனவே வேண்டுதல் வேண்டாமை இலாதான் என்ற திருக்குறளை ஐந்தாம் வகுப்பில் விருப்பு வெறுப்பில்லாதவன் என்று ...

POST: 2012-01-10T15:24:16+05:30

கரிகாலன் கல்லணை கட்டியதாக சங்கவிலக்கியத்தில் ஏதேனும் ஒரு தொடர் சுட்டிக்காட்ட முடியுமா என்று அறியாமல் நண்பர்களை விடை கேட்கிறேன்?

POST: 2012-01-10T15:17:06+05:30

ஒருவர் பேசுவதையோ எழுதுவதையோ பற்றி அயலார் புகழவோ அல்லது பழிக்கவோ வேண்டும். தாமே தம்பட்டம் அடித்துக்கொள்வது தமிழகத்தில் பெருகிவிட்டது. தாய் கூட மகனின்/மகளின் புகழை பிறர் சொல்லக் கேட்டு மகிழ்வது தான் திருக்குறளின் தீங்குரல்!

POST: 2012-01-09T15:04:56+05:30

வேட்டியோடு இந்திய நாட்டை ஆட்சி செய்தவர் காமராசர் மட்டுமல்ல,இந்திய ஆட்சியையே தலைமை தாங்கியது தேவ கௌடா...

POST: 2012-01-09T15:04:02+05:30

எல்லாமே வேடிக்கை திருப்பெரும்புதூர்,திருவல்லிக்கேணி,திருவில்லிப் புத்தூர்,திருவரங்கம் என்ற இலக்கியப்பெயர்கள் தமிழ்நாட்டில் தான் திருவை இழந்து ஸ்ரீபெரும்புதூர்,ஸ்ரீவில்லிப் புத்தூர்,ஸ்ரீரங்கம் என்று மாறியிருக்கிறது. ஆந்திரர்களோ,கேரளத்தவர்களோ திருப்பதி, ...

POST: 2012-01-09T14:57:26+05:30

எல்லாமே வேடிக்கை திருப்பதிக்கு சென்று வந்ததற்கு கட்சியை விட்டு கணேசனை நீக்கினார்களாம்.காசுடையவர் சென்னையில் திருவரங்கத்தை அமைத்துக்காட்டி நின்ற கோலத்திலும்,கிடந்த கோலத்திலும் பெருமாளை நிறுவிக்காட்டினார்கள்.கட்சி எப்படி வளர்கிறது என்று பார்த்து வீர பாண் ...