" Arul.2009/FB/#68939 நித்திலக்குவியல் தமிழ் மாத இதழ் மார்ச் 2026 NITHILA KOVIYAL Tamil Monthly பக்கம் எண்: 29, 30 தாமரைத்திரு' விருது பெற்ற ஔவை நடராசன் அவர்களின் புகழ் வாழ்க! ஆலந்தூர் மோகனரங்கன் நடந்துவரும் நடராசர் நடனமெல்லாம் தமிழ்நடனம்! நாடே சொல்லும்! அடர்ந்தவழிக் காடுகளில் அலையாமல் அருந்தமிழை ஆய்ந்து வென்றார்! தொடர்ந்தவழி தமிழ்வழியாய் துலங்கியதால் 'தாமரைத்திரு' தோன்றிற் றாமே! கடந்துவந்த வழியெல்லாம் காரிருளை மாய்த்துவந்த கதிரோன் ஆனார்! யாருக்கும் தெரியாமல் யார்யாரோ வாழ்கின்றார ...
POST: 2026-04-17T10:58:49+05:30
" Arul.2009/FB/#68938 இலக்கியச்சோலை - ஏப்ரல் 2026 மேடை மின்னல்கள் புலவர்க்கரசன் பொன்னரசன் பக்கம் எண் :57 நாடு போற்றும் நல்லறிஞர் பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்களைப்பற்றி கட்டுரை பின்வருமாறு: முத்தமிழ் ஆய்வுமன்ற எட்டாம் ஆண்டு மலர் 08-12-1992 அன்று வெளியிடப்பட்டது. அந்த மலரில் உரைவேந்தர் ஒளவை நடராசன் அவர்களைப் பாராட்டியும் வாழ்த்தியும் கவிஞர்கள் பலர் எழுதிய வெண்பாக்கள் தொகுப்பு இடம்பெற்றிருந்தது. அந்த வெண்பாக்களுள் வெண்பாவும் என்னுடைய என்னுடைய துணைவியார் செந்தமிழரசி புலவர் சந்திரா அவர்க ...
POST: 2026-04-16T10:22:40+05:30
" Arul.2009/FB/#68937 கோலங்கள் அழிவதில்லை என் அம்மாவுக்கு (மருத்துவமாமணி தாரா நடராசன்) நாள்தோறும் வீட்டு வாயிலில் கோலமிடுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். அவரின் அந்த விருப்பத்தைப் போற்றும் வகையில், தாரகை இல்லத்தின் முகப்பில் திருமதி ஜெயந்தி அவர்களின் கைவண்ணத்தில் ஒரு பெரிய வண்ணக் கோலத்தை வடிவமைத்தேன். அதைக் கண்ட போது அம்மாவின் முகத்தில் அரும்பிய புன்னகையும் நெகிழ்ச்சியும் இன்றும் என் நினைவில் பசுமையாக நிலைத்திருக்கின்றன. கால ஓட்டத்தில், சில ஆண்டுகளுக்குப் பிறகு தேர்ந்த வண்ணம் பூசுவ ...
POST: 2026-04-15T10:10:19+05:30
"" Arul.2009/FB/#68936 வந்த வாடைச் சில்பெயற் கடைநாள் நோய்நீந் தரும்படர் தீரநீ நயந்து" எனத் தொடங்கும் மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார் குறிக்கும் குறுந்தொகைப் பாடல் எண் முந்நூற்று முப்பத்து இரண்டு! "செந்தமிழ்த் தேனின் சுவைநயம் கூட்டி, சிந்தை இனிக்க வரும் உலகத்தமிழிதழ் எண் முந்நூற்று முப்பத்து இரண்டு!!"
POST: 2026-04-14T10:45:49+05:30
" Arul.2009/FB/#68935 அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136ஆம் பிறந்தநாள் (14.4.26) சமத்துவ நாள் உறுதிமொழி சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில் சாதி வேறுபாட ...
POST: 2026-04-13T09:54:57+05:30
" Arul.2009/FB/#68934 மின்னல் வேக ஓவியமும், மாறாத நினைவுகளும்! கடந்த 26.03.2026 அன்று சென்னையில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியொன்றில் பங்கேற்று, மேடையில் ஓவியர்களைப் பாராட்டி உரையாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது வருகை புரிந்திருந்த விருந்தினர்களைக் கவனித்தபடி பேசியபோது, ஓர் அதிசயம் நிகழ்ந்தது! நான்காம் வரிசையில் அமைதியாக அமர்ந்திருந்தார், 'பத்மஸ்ரீ', 'செவாலியர்' உயர்திரு. தோட்டா தரணி அவர்கள். அவரை அடையாளம் கண்டுகொண்ட கணமே, மேடைக்கு வருமாறு அன்புடன் அழைத்தேன். அவர் மேடைக்கு வந்தபோது, ஒ ...
POST: 2026-04-12T12:00:39+05:30
" Arul.2009/FB/#68933 பாரதி காவலர்: சொல்லும்- செயலும் "என்றுமுள தென்தமிழ்" தந்த எழில்மிகு கவிஞன் பாரதியின் புகழை, திசையெட்டும் பரப்பிய திண்ணிய நெஞ்சம் கொண்டவர் அண்மையில் மறைந்த பாரதி காவலர் கு இராமமூர்த்தி.(1.1.1937-7.4.2026) பள்ளி மாணவனாக நான் இருந்தபோது எங்கள் இல்லத்துத் தொலைபேசி மணி ஒலிக்கும் போதெல்லாம், அந்த ஒலியின் வழியே ஓர் இலக்கியச் சாரல் வீசும். தொலைபேசியை நான் கையில் ஏந்தும் பொழுதே, மறுமுனையில் அமுதத் தமிழில் ஒரு குரல் கேட்கும்: "பாரதி காவலர் இராமமூர்த்தி பேசுகிறேன்". அந்த ...
POST: 2026-04-11T11:32:56+05:30
" Arul.2009/FB/#68932 ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே! தமிழ்நாடு அரசின் சென்னை , மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் 37 பிரிவுகளில் 112 இருக்கைகளிலுள்ள 3381 கோப்புகள் மற்றும் 230 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், உதவியாளர்கள் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 09.04.2026 வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் யான் உரையாற்றினேன். துணை இயக்குநர் மருத்துவக் கல்வி மற்றும் ஆரா ...
POST: 2026-04-10T10:18:39+05:30
Arul.2009/FB/#68931 எங்கும் தமிழ்!எதிலும் தமிழ்! தமிழ்நாடு அரசின் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் அலுலகத்திலுள்ள 32 பிரிவுகளில் உள்ள 2412 கோப்புகள் மற்றும் 299 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர், தட்டச்சர் ஆகியோர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 09.04.2026 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன். தொழில் துறையின் கூடுதல் இயக்குநர் (ஊரக திட் ...
