POST: 2014-08-12T09:38:43+05:30

நடைமுறை குடும்பத்தின் நடப்புக்களை விம்மிதமுற்று மகிழும்படி எழுதிக்காட்டிய பெருமை வியட்னாம் வீடு சுந்தரம் அவர்களைச்சாரும்.அந்த மாபெரும் கலைஞரின் மணிவிழா வாழ்க்கையை,இளைஞர்கள் குழு மகபதி நாடகத்தை சங்கேத மொழியிலேயே நடித்துக்காட்டியதை 6.8.2014யன்று கண்டு மகிழ் ...

POST: 2014-08-12T09:20:36+05:30

மாணவ நண்பர்களே! நீங்கள் தமிழ் கற்கும் போதே வேறு துறை புலமையையும் ஒன்றாக வளர்த்துக்கொண்டால் தான் நாம் தமிழை அதோடு, அந்தக்கருத்தோடு இழைத்துக்காட்டி, ஒரு புதுமையை, பெருமையை, நலத்தை, வளத்தை மொழிக்குக் காட்டமுடியும். அந்த வகையிலேதான் பேராசிரியர்களுள் மு.வ. அவர ...

POST: 2014-08-11T08:24:21+05:30

நெடுங்கதைகளில் கையெழுத்திடுகிற போது, நாங்களெல்லாம் அப்போது மாணவர்களாக இருந்தபோதுகூட யாருக்காவது கையெழுத்திடுவது என்று சொன்னால் ‘நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் என்று சொல்லக் கற்றுக்கொண்டது மு.வ. அவர்கள் எழுதிய நெடுங்கதைகளால்தான். -தமிழ்க்கடல் ஔவை ந ...

POST: 2014-08-10T07:51:48+05:30

இன்று நீங்கள் இலக்கியத்தைக் காணும்பொழுது மனவியல் படிக்கின்ற மாணவர்கள் இருக்கிறார்கள். அறிவியல் படிக்கின்ற மாணவர்கள் இருக்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பல்கிப் பெருகிவருகின்றன. இப்படிப் பெருகிவருகின்ற துறைகளில் பங்கு பெறுகின்ற மக்கள் அவர்க ...

POST: 2014-08-09T19:55:51+05:30

வேந்தனிடத்திலே புலவர் போய் இடித்துக் கூறுவதும், புலவர் சொல்லை வேந்தன் தலைமேற் கொண்டிருப்பதும், தமிழ் மரபு. வாழ்க்கையில் வருகின்ற செல்வங்களை வளர்ச்சிக்காகத் தரமுடியும் என்பதற்காக செந்தமிழ்ச் செல்வர் சேதுப்பிள்ளை அவர்கள் தன்னுடைய அன்னையின் பெயரால், சொர்ணாம் ...

POST: 2014-08-06T09:23:22+05:30

பேராசிரியர் அரங்க இராமலிங்கமும், பேராசிரியர் அரசும் இந்த ஆண்டோடு தன் பணியை நிறைவு காண்கிறார்கள். அவர்கள், மனம் நிறைவு தருகின்ற வகையில் பணியாற்றியதோடு அவர்கள் ஆற்றிய பணிகள் எல்லாம் எவ்வளவு மகிழ்வுடைய பணிகள் என்று நான் கண்டிருக்கிறேன். அதைப் பாராட்டுகின்ற வ ...

POST: 2014-08-05T09:34:10+05:30

இளைஞராக இருந்து, ஆசிரியர் சங்கத்துக்காகவே அல்லும் பகலும் உழைத்து, தான் கற்ற கல்வியும்,பெற்ற திறமும் ஒரு புறம் இருந்தாலும் மக்களிடையே பெறவேண்டிய மதிப்பும் சிறப்பும் எந்நாளும் மாசுபடலாகாது என்ற வகையில் நின்றவர்தான் இளைஞர் செல்வராசன். இப்படியெல்லாம் வேறுதுறை ...

POST: 2014-08-02T07:49:08+05:30

சங்க கால வேந்தர்களின் காலவரலாற்று நிரல்களைக் கண்டறிவதற்கு ஒரு வேதமாக விளங்குகின்ற நூல் என்பது கே.என். சிவராஜப்பிள்ளை எழுதிய கட்டுரைகள்தான். ஏனென்றால் அதற்கு முன்னால் வேந்தர்களின் காலவரிசையைப் பற்றிய கருத்து நமக்கு இல்லை. -தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

POST: 2014-07-30T08:20:45+05:30

கிரேக்க நாட்டினுடைய அரசனும் அரசியும் சென்னை மாநகருக்கு வந்து நாங்கள், சென்னை மாநகருக்கு ஏன் வந்தோம் என்று கேட்டால், சென்னைப்பல்கலைக்கழகத்துத் தத்துவத்துறைப் பேராசிரியரிடத்தில் நாங்கள் படிக்க வந்திருக்கிறோம் என்றார்கள். தத்துவத்துறை பேராசிரியராக இருந்த ட ...

POST: 2014-07-29T23:04:56+05:30

ஒரு காலத்தில் டி.வி. மகாலிங்கம் என்பவர் எழுதிய நூல்தான் தொல்பொருள் ஆய்வுத்துறையினருக்கு ஒரு பெரிய நூலாக இருந்தது. தொல்பொருள் ஆய்வுத்துறை என்ற படிப்பே கூட இப்போது வாய்ப்பில்லாமல் குறைந்துவிட்டது. -தமிழ்க்கடல் ஔவை நடராசனார்